பெரியாம்பட்டியில் உலக மலேரியா தின விழிப்புணர்வு கூட்டம்
பெரியாம்பட்டியில் உலக மலேரியா தின விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மலேரியா தின விழிப்புணர்வு கூட்டம் தர்மபுரி பெரியாம்பட்டியில் உள்ள பத்மாவதி நர்சிங் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எம்.ஜி.சேகர் தலைமை தாங்கினார். கல்லூரி துணைத்தலைவர் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வி வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சுப்ரமணியன், மாவட்ட மலேரியா அலுவலர் ஜம்புலிங்கம், வட்டார சுகாதார ஆய்வாளர் மாதையன் ஆகியோர் கலந்துகொண்டு மலேரியா நோய் பரவும் விதம், அதனை தடுக்கும் விதம், கொசுக்கள் வளரும் தன்மை அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினர். உலக மலேரியா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் டாக்டர் டி.சி.பிரேம் ஆனந்த், கல்லூரி செயலாளர் ராஜா மற்றும் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story