நல்லம்பள்ளி அருகே போதை ஊசி விற்பனை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


நல்லம்பள்ளி அருகே போதை ஊசி விற்பனை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 29 April 2022 5:35 PM GMT (Updated: 2022-04-29T23:05:12+05:30)

நல்லம்பள்ளி அருகே போதை ஊசி விற்பனை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள பொதியகவுண்டர் மயில்கொட்டாய் மற்றும் சாமிசெட்டிப்பட்டி ஆகிய கிராமங்களில் மருந்து கட்டுபாட்டு அதிகாரிகள் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதே கிராமங்களை சேர்ந்த வஜ்ரவேல் (வயது47), முருகேசன் (46) ஆகியோர் போதை ஊசிகளை பதுக்கி, போதை பிரியர்களுக்கு, ஊசி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போதை தடுப்பூசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில் சட்ட விரோதமாக போதை ஊசி பயன்படுத்தி வந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து வஜ்ரவேல், முருகேசன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார்.

Next Story