உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 April 2022 11:05 PM IST (Updated: 29 April 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,:
உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கெயில் எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்த்து போராடி உயிரிழந்த கணேசன் குடும்பத்திற்கு கெயில் நிறுவனம் இழப்பீடு வழங்ககோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ரவீந்திரன், மாநில செயலாளர் டில்லிபாபு, மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட தலைவர் மல்லையன், மாவட்ட பொருளாளர் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது விளைநிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பெருமாள், அன்பு, தீர்த்தகிரி, சின்னசாமி, வஞ்சி, சக்திவேல், முருகன், வேலு, மணி, கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார், செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, விசுவநாதன், மல்லிகா, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம், சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் கலாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நிர்வாகிகள்‌ கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து உள்ளே விட மறுத்தனர். இதனை கண்டித்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன் பின்னர் நிர்வாகிகளை உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர். பின்னர் கலெக்டர் திவ்யதர்சினியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது கெயில் நிர்வாகத்திடம் இருந்து இறந்த விவசாயி கணேசன் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்று தரவும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.
முன்னதாக நேற்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கரியப்பன அள்ளி கிராமத்தில் உள்ள விவசாயி கணேசன் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Next Story