தர்மபுரி அருகே பழைய இரும்பு கடையில் திருடியவர் கைது


தர்மபுரி அருகே  பழைய இரும்பு கடையில் திருடியவர் கைது
x
தினத்தந்தி 29 April 2022 5:35 PM GMT (Updated: 2022-04-29T23:05:16+05:30)

தர்மபுரி அருகே பழைய இரும்பு கடையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி:
தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையில் போலீசார் தர்மபுரி பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய ஏலகிரி பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது 32) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தர்மபுரி பகுதியில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரும்பு வயர் மற்றும் ரூ.30 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.

Next Story