மாணவனை அடித்த விவகாரம்: அரசு பள்ளி ஆசிரியர் மீது வழக்கு


மாணவனை அடித்த விவகாரம்:  அரசு பள்ளி ஆசிரியர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 April 2022 5:35 PM GMT (Updated: 2022-04-29T23:05:22+05:30)

நல்லம்பள்ளி அருகே மாணவனை அடித்த விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் பிரணவ்ஆதித்யா (வயது 11). இவன் அதியமான்கோட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி, பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் துரைராஜ் என்பவர் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புக்கு தாமதமாக வருவதாக கூறி மாணவனை திட்டி கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவனின் தாயார் சரவணா அதியமான்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நேற்று ஆசிரியர் துரைராஜ் (54) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story