பாலாற்று பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
பாலாற்று பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவரை கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி- சென்னாம்பேட்டை பகுதியை ஒட்டியுள்ள பாலாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் ஆங்காங்கே மணல் தோண்டப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அங்கு 50 அடி ஆழமுள்ள பள்ளத்தில் ஒருவர் பிணமாக கிடப்பதாக வாணியம்பாடி டவுன் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று தண்ணீரில் மிதந்த உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த பகுதியில் அதிக அளவில் மணல் கடத்தல் நடப்பதால், மணல் கடத்தல் காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை செய்து வீசப்பட்டு இருப்பாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story