தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சேதமடைந்த குடிநீர்தொட்டி
விருதுநகர் மாவட்டம் வள்ளியூர் ஊராட்சிக்குட்பட்ட வி.சுந்தரலிங்கம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்தநிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டியின் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இந்த தொட்டியின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி தனியார் அலுவலகம் பின்புறம் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால் தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் கவனித்து தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும்.
காளீஸ்வரன், மேல அனுப்பானடி.
சுகாதார சீர்கேடு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள மொட்டையாசாமி கோவில் தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. தேங்கிய கழிவுநீர் நிரம்பி அங்குள்ள சாலைகளில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிவருகிறது. தேங்கிஓடும் கழிவுநீரால் அப்பகுதி சுகாதார சீர்கேடு அடைந்து பொதுமக்கள் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும்.
தனசிராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
பள்ளமான சாலை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பெரியார் கால்வாய் கிழக்கு-அழகர்கோவில் சாலை பள்ளமாகி குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கும் வாகன ஒட்டிகள் சிரமப்படுகிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் காலதாமதமாகி செல்ல வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
முத்துகிருஷ்ணன், மேலூர்.
சேதமடைந்த படிக்கட்டுகள்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரோடு பாலத்தின் நடைபாதை படிக்கட்டுகள் கற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராமநாதபுரம்.
குண்டும், குழியுமான சாலை
மதுரை மாவட்டம் 17-வது வார்டு சி.ஆர்.ஓ. காலனி 2-வது தெரு, மகாத்மா காந்திநகர் பகுதியில் சாலையானது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் வாகனங்களை இயக்கும் வாகன ஒட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். சேதமடைந்த சாலையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வர சிரமப்படுகின்றனர். மணி, மதுரை.
வேகத்தடை வேண்டும்
ராமேசுவரம் கோவில் மற்றும் பஸ் நிலையம் செல்லும் முக்கிய சாலையான ராம தீர்த்தம் பகுதியில் எஸ்.பி.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு அருகே உள்ள சாலையில் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் மாணவிகள் இந்த சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், ராமேசுவரம்.
கால்நடைகள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் நகர் பகுதிகளில் கால்நடைகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வருபவர்களும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேவதி, சிவகங்கை.
கால்வாய் அமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீமானூத்து கிராமம் அருகே ரெயில்வே பீடா்ரோடு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் கழிவுநீரானது சாலையில் தேங்கி நிற்கிறது. ஆதலால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு அடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.
பொதுமக்கள், உசிலம்பட்டி.
Related Tags :
Next Story