வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 29 April 2022 5:45 PM GMT (Updated: 29 April 2022 5:45 PM GMT)

பாணாவரத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பொது மருத்துவம், இ.சி.ஜி., ரத்த அழுத்தம், தோல் நோய், கண், பல் சிகிச்சை, கர்ப்பிணிகள் பரிசோதனை, இருதயநோய், சர்க்கரை அளவு, வாய்ப் புற்றுநோய் பரிசோதனை, காது மூக்கு தொண்டை பரிசோதனை உள்ளிட்டவைகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சையளிக்கப்பட்டது.

பாணாவரம், குப்புக்கல்மேடு, போளிப்பாக்கம், கீழ்வீராணம், பன்னியூர், மங்கலம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 750 நபர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். பாணாவரம் அரிமா சங்கம் மூலம் தன்னார்வலர்கள் ரத்ததானம் செய்தனர். அங்கன்வாடி பணியாளர்கள் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய சத்துணவு குறித்து கண்காட்சி அமைத்திருந்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டேவிஸ் பிரவீன் ராஜ்குமார், காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி, துணை தலைவர் முனியம்மாள், கவுன்சிலர் தீபாகாா்த்திகேயன், ஊராட்சிமன்ற தலைவர் ஆர்ஜீனன், துணை தலைவர் சரண்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ், பாணாவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரைமஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story