போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு


போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 29 April 2022 11:28 PM IST (Updated: 29 April 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது

குத்தாலம்
 தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு குத்தாலம் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் காந்திமதி அறிவுறுத்தலின்பேரில் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி உள்ளிட்டவை நடந்தன. போட்டிக்கு மாவட்ட நுகர்வோர் கண்காணிப்புக் குழு உறுப்பினர் சூர்யா தலைமை தாங்கினார். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி உள்பட ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story