தக்கோலத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்


தக்கோலத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 29 April 2022 11:28 PM IST (Updated: 29 April 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

தக்கோலத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

அரக்கோணம்

தக்கோலம் பகுதியில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 2½ ஏக்கர் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதனை அகற்றும் பணி  நடந்தது. அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் தலைமையில், பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 

தக்கோலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வருவாய் ஆய்வாளர் சுந்தரம், தக்கோலம் கிராம நிர்வாக அலுவலர் வினோத் சந்திரன் மற்றும் பொதுப்பணிதுறை பொறியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story