பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 April 2022 6:02 PM GMT (Updated: 2022-04-29T23:32:32+05:30)

தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம், 

தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காளிராஜு, மாவட்ட பொருளாளர் புதுராஜா, மாவட்ட அமைப்பு செயலாளர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சரவணன், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஸ் வின்சென்ட் ஜெயசிங், ஆரோக்கிய சகாயதாஸ், மாவட்ட துணை செயலாளர் ஆல்பர்ட் மனோகரன் ஆகியோர் பேசினர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் தவராம்குமார் நன்றி கூறினார்.  இதில் பணி நிரவல் கலந்தாய்வு மூலம் கூடுதல் பணியிடத்தில் பணியமர்த்திய ஆசிரியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story