மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
x
தினத்தந்தி 29 April 2022 11:35 PM IST (Updated: 29 April 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

மன்னார்குடி:
மன்னார்குடி கோபாலசமுத்திரம் நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். முகாமை திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு தொடங்கி வைத்தார். இதில் திருவாரூர் மற்றும் தஞ்சை மருத்துவக்கல்லூரி டாக்டர்கள்  கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடல் மற்றும் மன நல பாதிப்புகள் குறித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். முகாமில் 150- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன், வட்டார கல்வி அலுவலர்கள் இன்பவேனி, தாமோதரன், தனபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story