பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 29 April 2022 11:39 PM IST (Updated: 29 April 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

கரூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர், 
ஆர்ப்பாட்டம்
 கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு  கரூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முருகேசன் உரைஆற்றினார். 
இதில் மாவட்ட பொருளாளர் ஆனந்தகுமார், அமைப்பு செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 
பழைய ஓய்வூதிய திட்டம்
பணி நிரவல் கலந்தாய்வில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே பெற்று வழங்கிட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனே வழங்கிட வேண்டும். ஆசிரியர்களுக்கு என்று தனியாக பணிப்பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும்.  புதிய ஓய்வூதிய திட்டம் சிபிஎஸ்-யை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களது உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை கடந்த காலங்களில் வழங்கியது போல் தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story