பரமக்குடி பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கம்
பரமக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பரமக்குடி,
பரமக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கள்ளநோட்டுகள் புழக்கம்
பரமக்குடியில் உள்ள வாரச்சந்தை மற்றும் சிறிய மளிகை கடைகள், காய்கறி, பழக்கடைகளில் பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்கும் போது அதில் கள்ள நோட்டுகளும் சேர்ந்து வருவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல் கள்ள நோட்டா என்பது தெரியாமல் பொதுமக்களிடம் புழக்கத்தில் வரும் அந்த கள்ள நோட்டுகள் வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்க செல்லும் பொழுது பொருட்களை வாங்கிவிட்டு ரூபாய் நோட்டுகளை கொடுக்கும்போது சில வியாபாரிகள் அந்த ரூபாய் நோட்டுகளை சோதனை செய்து இது கள்ளநோட்டு என கூறி பொதுமக்களிடம் திருப்பிக் கொடுத்து விடுகின்றனர். இதில் குறிப்பாக 50 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் அதிகம் உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கள்ள நோட்டுகள் புழக்கத்தால் பரமக்குடி வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கோரிக்கை
இதனால் சாதாரணமாக கடைகளில் 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லரை கேட்டால்கூட வியாபாரிகள் சில்லரை இல்லை என மறுக்கின்றனர். ஆகவே இது குறித்து தமிழக அரசும், காவல்துறையினரும் உரிய ஆய்வு மேற்கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை பிடிக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story