அரவக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் குவிந்து கிடக்கும் துருப்பிடித்த வாகனங்கள்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 29 April 2022 11:41 PM IST (Updated: 29 April 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் குவிந்து கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி, 
பழைய வாகனங்கள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகம் அருகே பழைய போலீஸ் நிலையம் இயங்கி வந்த கட்டிடம் உள்ளது. தாலுகா அலுவலக வளாகத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள துருப்பிடித்த வாகனங்கள் அதிக அளவில் உள்ளன. 
இதனால் இங்கு பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதிக்கு மக்கள் செல்ல தயங்கி வருகின்றனர். தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், பயணியர் விடுதி, இ-சேவை மையம், அரசு கருவூலம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
கோரிக்கை
தாலுகா அலுவலக பகுதியில் போலீஸ் நிலையம் செயல்பட்ட போது அச்சமயத்தில் போலீசாரின் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட டெம்போ, கார், பைக்குகள் என பலதரப்பட்ட வாகனங்களை தாலுகா அலுவலக வளாக பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். 
அவைகள் சிதிலமடைந்து, துருப்பிடித்து உபயோகமற்ற குப்பை கிடங்காக காட்சி தருகிறது. எனவே தாலுகா வளாகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள துருப்பிடித்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story