நாட்டுத்துப்பாக்கியை கீழே போட்டு விட்டு தப்பி ஓடிய வாலிபர்


நாட்டுத்துப்பாக்கியை கீழே போட்டு விட்டு தப்பி ஓடிய வாலிபர்
x
தினத்தந்தி 29 April 2022 6:35 PM GMT (Updated: 2022-04-30T00:05:07+05:30)

மூக்கனூரில் போலீசை கண்டதும் நாட்டுத்துப்பாக்கியை கீழே போட்டு விட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் ஏட்டு புருஷோத்சிங் மற்றும் போலீஸ்காரர் விஜயகுமார் ஆகியோர் நேற்று அதிகாலை மூக்கனூர் பகுதியில் தீவிர ரோந்து பணி  மேற்கொண்டனர். 

அப்போது அதே ஊர் புற்று மாரியம்மன் கோவில் அருகில் 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் அருகில் இருந்த கரும்பு தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்தபோது போலீசாரை கண்டதும் துப்பாக்கியை சாலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் நாட்டுத்துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலவீசி தேடி வருகிறார்கள். 

Next Story