கார் மோதி வாலிபர் பலி


கார் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 29 April 2022 6:49 PM GMT (Updated: 2022-04-30T00:19:02+05:30)

தேவகோட்டை அருகே கார் மோதி வாலிபர் பலியானார்.

தேவகோட்டை, 

தேவகோட்டை ராம் நகரை சேர்ந்தவர் சேவியர் எடிசன் (வயது 34). தனியார் திருமண மண்டப பொறுப்பாளர். இவரது மனைவி மிக்கேலம்மாள். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் தேவகோட்டையில் இருந்து முப்பையூருக்கு சேவியர் எடிசன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் உள்ள கிறிஸ்தவ பாதிரியார் ஜான் திரவியம் மதுரையில் இருந்து திருவாடானை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.தேவகோட்டையில் இருந்து முப்பையூர் சென்ற சேவியர்எடிசன் தொண்டி-மதுரை சாலையில் வந்த போது ஜான் திரவியம் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விரைந்து சென்று சேவியர் எடிசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story