வண்டிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வண்டிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
தாமரைக்குளம்
உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் முதன்முறையாக எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் வண்டிப்பாதை புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள் வருவாய்த்துறை மூலம் இடிக்கப்பட்டன. பொதுமக்கள் அரசு நிலங்களை எவ்விதத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வீடுகளை இடித்தபோது பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீட்டுவசதி வரி கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அதிகாரிகள் அனுமதி வழங்குகிறார்கள் ஆனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் ஆகிய நாங்கள் தான் என தெரிவித்தனர். வீடுகளை இடிக்கும் பணியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலா, அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, அரியலூர் வடக்கு கிராம நிர்வாக அதிகாரி சீனிவாசன் ஆகியோர் ஈடுபட்டனர். வீடுகள் இடிக்கப்பட்டபோது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story