பள்ளி அருகே டாஸ்மாக்கடை அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு


பள்ளி அருகே டாஸ்மாக்கடை அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 30 April 2022 12:24 AM IST (Updated: 30 April 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி அருகே டாஸ்மாக்கடை அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

செந்துறை
டாஸ்மாக் கடை 
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பரணம் கிராமத்தின் பெரியாண்டவர் கோவில் அருகே முந்திரி தோப்பு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. முந்திரிக்காட்டில் இயங்கி வரும் இந்த கடையை ஊர் பகுதியில் கொண்டுவர டாஸ்மாக் ஊழியர்கள் திட்டமிட்டனர். அதன்படி அங்கு இயங்கி வரும் டாஸ்மாக் கடையை பரணத்தில் இருந்து பிலாக்குறிச்சி செல்லும் வழியில் உள்ள சாலையோரத்தில் உள்ள இடத்தில் டாஸ்மாக் கடையை அமைக்க முடிவு செய்தனர். இந்த சாலை பரணம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் ஒரே தார்சாலை ஆகும்.
மாபெரும் போராட்டத்தில்...
இந்த சாலை வழியாகவே பிலாக்குறிச்சி, வீராக்கன், நாகல்குழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடையை பரணம் உயர்நிலைப்பள்ளி அருகே வைப்பதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மாணவர்களிடம் கையெழுத்து பெற்று மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். இதனையும் மீறி இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் மாணவர்கள்,  பெற்றோர்களுடன் இணைந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Next Story