கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம்


கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம்
x
தினத்தந்தி 30 April 2022 12:24 AM IST (Updated: 30 April 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 கிராம ஊராட்சிகளிலும் அந்தந்த கிராம ஊராட்சி தலைவர்களால் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. மிக சிறப்பாகவும், பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் வகையிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். 

மேலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்தை கிருமி நாசினி தெளித்தும், சுத்தமாகவும், குடிநீர் வசதி ஏற்படுத்திடும் பணிகளை அந்தந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து அரசின் கொரேனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிராம சபை கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும், இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story