தக்கலையில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது


தக்கலையில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 30 April 2022 12:25 AM IST (Updated: 30 April 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

தக்கலையில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 வாலிபர்ளை போலீசார் கைது செய்தனர்.

பத்மநாபபுரம், 
தக்கலையில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது
தக்கலை அருகே வட்டம் கோட்டவிளை பகுதியை சேர்ந்தவர் சாந்தாபாய் (வயது 62). இவர் அழகர்அம்மன் கோவில் அருகாமையில் உள்ள நர்சரி கார்டனில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று நர்சரி கார்டனில் சாந்தாபாய் வேலை செய்த போது, முகத்தை துணியால் மறைத்து கட்டிக்கொண்டு ஒரு வாலிபர் வந்தார். அவர் செடிகளின் விலையை கேட்பது போல் சாந்தாபாய் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, தயாராக நின்ற மற்றொருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டார். இதுபற்றி சாந்தாபாய் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த அபி (26), காட்டாக்கடை பகுதியை சேர்ந்த அகாஷ் (26) ஆகிய 2 பேர் நகையை பறித்து விட்டு தப்பியது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு தங்க சங்கிலியை பறித்ததாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

Next Story