மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு


மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 30 April 2022 12:27 AM IST (Updated: 30 April 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

அறந்தாங்கி, 
அறந்தாங்கி அருகே பொன்பேத்தியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 61). இவர் நேற்று குட்டை குளம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனது மகள் வழி பேத்தி திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த ரூ.3 லட்சத்தை எடுத்தார். பின்னர் அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்து இருந்த ரூ.3 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story