போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் சரவணன் (வயது 42). இவர் கடந்த மார்ச் மாதம் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் தந்தை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா குண்டர் சட்டத்தில் சரவணனை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையின் நகலை திருச்சி மத்திய சிறை நிர்வாகத்தினாிடன் போலீசார் வழங்கினர். மேற்படி சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, பெண் போலீஸ் பார்வதி ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பெரிதும் பாராட்டினார்.
Related Tags :
Next Story