கள் விற்ற தொழிலாளி கைது
பூவந்தி அருகே கள் விற்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திருப்புவனம்
பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது கணக்கன்குடி கிராமம். இங்குள்ள காலனி அருகே விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, வாழவந்தாள்புரத்தைச் சேர்ந்த விஜய் (வயது 24) என்ற தொழிலாளி பதநீர் இறக்கி விற்பனை செய்து வந்தாராம். இதற்கிடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள் பானம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் தலைமையில் சென்ற போலீசார் அரசு அனுமதியில்லாமல் விற்பனைக்காக வைத்திருந்த 4 லிட்டர் கள் பானத்தை பறிமுதல் செய்தும், விஜய் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story