கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல்


கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 29 April 2022 7:09 PM GMT (Updated: 2022-04-30T00:39:55+05:30)

கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

திருமயம், 
திருமயம் கோட்டை பகுதியில் சுரங்கத்துறை அதிகாரி விஜயகுமரன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தினர். இதனால் பீதியடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து, அந்த லாரியில் அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் 6 யூனிட் கிராவல் மண் அனுமதியின்றி எடுத்து சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருமயம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து சுரங்கத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் தப்பி ஓடிய டிரைவர், டிப்பர் லாரி உரிமையாளர் துரைக்கண்ணன் ஆகியோர் மீது திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story