ரேஷன் பொருட்களை வாங்க வெயிலில் காத்திருக்கும் பொதுமக்கள்
வடகாடு பகுதியில் ரேஷன் பொருட்களை வாங்க பொதுமக்கள் வெயிலில் காத்திருந்தனர்.
வடகாடு,
தமிழகமெங்கும் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வரும் நிலையில், வடகாடு பகுதியில் ரேஷன் பொருட்களை வாங்க வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் நேற்று பயோமெட்ரிக் சாதனம் இயங்காததால் நீண்ட நேரம் வரை காத்திருந்த பொதுமக்கள் வெயில் தாங்காமல் தாங்கள் கொண்டு வந்திருந்த பைகளை வரிசையில் வைத்துவிட்டு நிழல் இருந்த இடம் தேடி தஞ்சமடைந்தனர். மேலும் கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் ரேஷன் கடைகள் முன்பு நிழல் தரும் பந்தல் அமைக்கவும், பயோமெட்ரிக் எந்திரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை போக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story