ஆறுகளில் குவியும் சுற்றுலா பயணிகள்


ஆறுகளில் குவியும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 30 April 2022 12:50 AM IST (Updated: 30 April 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஆறுகளில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். இதனால் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு, 
தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஆறுகளில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். இதனால் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
நீர்வரத்து அதிகரிப்பு 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள  அத்திக் கோவில், பாப்பானத்தான் பெருமாள் கோவில், தலமலையான் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 
இங்கு  வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் இளைஞர்கள் மற்றும் எண்ணற்ற சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்காக வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள், வாலிபர்கள் அந்த பகுதியில் உள்ள ஆற்றுப்பகுகளின் வழியாக மலை பகுதிகளுக்குள் வெகுதூரம் சென்று அங்குள்ள நீர் வரத்து பகுதிகளில் குளிக்கின்றனர். 
குளிப்பதற்கு தடை 
தமிழகத்தில் மேலும் தொடர்ச்சியாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வனத்துறையினர் நீர்வரத்து வரும் பகுதிகளான அத்தி கோவில், தலைமலையன் கோவில், பாப்பானத்தான் பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். எனவே வனத்துறையினர் இப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். நீர்வரத்து அதிகரித்தால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். 
தடையை மீறி வனப்பகுதிக்குள் சென்று வரும் நபர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story