மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது


மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 29 April 2022 7:20 PM GMT (Updated: 2022-04-30T00:50:51+05:30)

மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் நாகமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வி.கைகாட்டி பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் நாகமங்கலம் நோக்கி வந்த நாகமங்கலம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன்(வயது 63) என்பவரை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது. பின்பு அதில் இருந்த 27 மதுபாட்டில்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story