3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க ஏற்பாடு


3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க ஏற்பாடு
x
தினத்தந்தி 29 April 2022 7:24 PM GMT (Updated: 29 April 2022 7:24 PM GMT)

3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என காரியாபட்டி பேரூராட்சி தலைவர் கூறினார்.

காரியாபட்டி, 
3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என காரியாபட்டி பேரூராட்சி தலைவர் கூறினார். 
சாதாரணக்கூட்டம் 
காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரூபி சந்தோசம், செயல் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிப்பு செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் காரியாபட்டி பேரூராட்சியில் கால்நடை வாரச்சந்தை அமைப்பது, சிறுவர் பூங்கா அமைப்பது, தாமிரபரணி திட்டத்தின்மூலம் கூடுதலாக குழாய் இணைப்பு வழங்க வேண்டும். 
மின் மயானம் 
திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கில் மீண்டும் உரம் தயாரிக்கும் பணி செய்யவும், காரியாபட்டியில்  மின்மயானம் அமைப்பது, சந்தை திடல் வணிக வளாக கடைகளை பராமரிப்பு செய்வது,  மாதந்தோறும் பேரூராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைேவற்றப்பட்டன. 
கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ேபசுகையில், காரியாபட்டியில் ஒவ்வொரு பகுதியிலும் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். 
இதில் கவுன்சிலர்கள் லியாகத் அலி, ராம்தாஸ், முனீஸ்வரி, முகமது முஸ்தபா. சங்கரேஸ்வரன், நாகஜோதி, வசந்தா, தீபா, சத்தியபாமா, செல்வராஜ் திருக்குமாரி, முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Next Story