பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 29 April 2022 7:27 PM GMT (Updated: 2022-04-30T00:57:50+05:30)

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர்
புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மையத்தின் இயக்குனர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் அலிபாவா கலந்து கொண்டு பாரதிதாசனின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, இலக்கிய பணி உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார். மேலும் கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதிதாசனின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது பாடல்கள் மாணவ-மாணவிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இதில் அரசு கல்லூரி முதல்வர் ரேவதி, மையத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கணிதவியல் பேராசிரியர் அர்ச்சனா செய்திருந்தார். முன்னதாக கணிப்பொறியியல் துறை பேராசிரியர் திருமுருகன் வரவேற்றார். முடிவில் கணிதவியல் துறை பேராசிரியர் கலைக்கோவன் நன்றி கூறினார்.

Next Story