ரூ.1 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை


ரூ.1 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை
x
தினத்தந்தி 30 April 2022 1:06 AM IST (Updated: 30 April 2022 1:06 AM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிைகயை முன்னிட்டு வள்ளியூர் வாரச்சந்தையில் நேற்று ரூ.1 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை ஆனது. ஒரு சேவல் ரூ.2 ஆயிரத்துக்கு விற்றதால் அந்த வியாபாரி மகிழ்ச்சி அடைந்தார்.

வள்ளியூர்:
ரம்ஜான் பண்டிைகயை முன்னிட்டு வள்ளியூர் வாரச்சந்தையில் நேற்று ரூ.1 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை ஆனது. ஒரு சேவல் ரூ.2 ஆயிரத்துக்கு விற்றதால் அந்த வியாபாரி மகிழ்ச்சி அடைந்தார்.

வாரச்சந்தை

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆடு மற்றும் கோழிகள் விற்பனை செய்யும் சந்தை நடைபெறுகிறது.
இந்த சந்தைக்கு நெல்லை மாவட்டம் மட்டுமின்றி பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் வருவார்கள். 

ஆடு, கோழிகள் வாங்கவும், விற்கவும் வியாபாரிகள் உள்ளிட்டவர்கள் திரள்வதால் சந்தையில் கூட்டமாக இருக்கும்.

ரூ.1 கோடிக்கு விற்பனை

இந்த நிலையில் அடுத்த வாரம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் வாங்க வழக்கத்தை விட வியாபாரிகள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் ஆடு மற்றும் கோழி விலை உயர்ந்து விற்பனை ஆனது.

கடந்த வாரம் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையான ஆடு, நேற்று ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதாவது, ஆடு விலை இருமடங்கு அதிகரித்து இருந்தது. இதேபோல் நாட்டுக்கோழி ரூ.500 வரையிலும் விற்பனையானது. ரூ.2 ஆயிரத்துக்கு ஒரு சேவல் விலை போனதால் அந்த வியாபாரி மகிழ்ச்சி அடைந்தார்.
நேற்று மட்டும் சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story