கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்


கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 30 April 2022 1:08 AM IST (Updated: 30 April 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செந்துறை
அரியலூர் மாவட்டம், செந்துறையில் இருந்து தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் செந்துறை சிவன் தாண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் 65 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 1985-ம் ஆண்டு அறநிலையத்துறை அரசு ஊழியர்கள் கூட்டமைப்புக்கு விற்பனை செய்தது. இதனை எதிர்த்து அந்த இடத்தில் விவசாயம் செய்து வந்த விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கு பல்வேறு நீதிமன்றத்தில் நடைபெற்று இரு தரப்பினருக்கும் சாதகமாக மாறி மாறி தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் அரசு ஊழியர்கள் கூட்டமைப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதன்படி பிரச்சினைக்குரிய இந்த 10 ஏக்கர் 65 சென்ட் நிலத்தை அளந்து காட்டும்படி மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து விவசாயிகள் மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 15.03.2022 அன்று விவசாயிகளின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து 218 நபர்களுக்கு மனை அளந்து விடும் பணிகள்  நடைபெறுகிறது. அதன் முதல் கட்டமாக அந்த இடத்தில் இருந்த கருவேல மரங்கள் மற்றும் தென்னை மரங்கள், தேக்கு மரங்களை 4 பொக்லைன் எந்திரங்களை கொண்டு அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் அகற்றினர். இதன் மூலம் வந்துள்ளதாக அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Next Story