2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 29 April 2022 7:52 PM GMT (Updated: 2022-04-30T01:22:53+05:30)

நெல்லையில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:

நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர். நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 30). இவர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை வழக்கில் பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சென்னல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேதுபாண்டி மகன் இசக்கி பாண்டி (24). இவர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நெல்லை சந்திப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி, நெல்லை மாநகர மேற்கு துணை போலீஸ் கமிஷனர் கே.சுரேஷ்குமார், போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமாருக்கு பரிந்துரை செய்தார். போலீஸ் கமிஷனர் அதனை ஏற்று 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் ஹரிஹரன் (பேட்டை), முத்து குமரன் (நெல்லை சந்திப்பு) 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை அந்தந்த சிறை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தனர்.

Next Story