வாலிபர் பலி


வாலிபர் பலி
x
தினத்தந்தி 29 April 2022 8:07 PM GMT (Updated: 2022-04-30T01:37:02+05:30)

திருப்பனந்தாள் அருகே நடந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.

திருப்பனந்தாள், ஏப்.30-
திருப்பனந்தாள் அருகே கோட்டூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகையன். இவருடைய மகன் சேரன்(வயது21). டிராக்டர் டிரைவர். அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித் (21). இவர்கள் இருவரும் நேற்று இரவு மாட்டார் சைக்கிளில் கஞ்சனூர் நோக்கி சென்றனர். 
துகிலி சாலை திருப்பத்தில் இவர்கள் சென்ற போது கும்பகோணத்தில் இருந்து குத்தாலம் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பஸ் சக்கரத்தின் பின்னால் மோட்டார் சைக்கிள் சிக்கியதில் படுகாயமடைந்த சேரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்து மயங்கி கிடந்த ரஞ்சித் 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.  இந்த விபத்தால் கல்லணை- பூம்புகார் சாலையில் சுமார்1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story