புகார் பெட்டி
புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு
மின்விளக்கு வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் பள்ளியக்கிரஹாரம் பகுதியில் கிருஷ்ணாநகர், வி.ஆர்.கார்டன், சமயபுரத்தம்மா நகர் ஆகியவை உள்ளன. இந்த நகர்களில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட நகர்களில் பொதுமக்கள் வசதிக்காக மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. ஆனால், மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் மின்விளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை.
சாலை பணி விரைவுப்படுத்தப்படுமா?
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்ல இணைப்பு சாலைகளாக கூட்டுறவு காலனி சாலை, நடராஜபுரம் தெற்கு காலனி சாலை, முனிசிபல் காலனி சாலை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கண்ட பகுதிகளில் புதிய தார்சாலை அமைப்பதற்காக பழைய தார் சாலைகள் பெயர்க்கப்பட்டது. இதனால் அந்த சாலைகள் கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. சாலை பெயர்க்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை.
Related Tags :
Next Story