சேலத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம்:-
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சேலம் மாவட்டம் சார்பில் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் முகமது அலி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குகிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட பொருளாளர் ராஜா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story