ஈரோடு மாநகராட்சி கட்டிடத்தில் ‘ஒயர்லெஸ்’ இணைப்புக்கான கோபுரம் சாய்ந்தது
ஈரோடு மாநகராட்சி பழைய கட்டிடத்தில் ஒயர்லெஸ் இணைப்பு கோபுரம் சாய்ந்தது.
ஈரோடு மாநகராட்சி பழைய கட்டிடத்தில் ஒயர்லெஸ் இணைப்பு கோபுரம் சாய்ந்தது.
ஒயர்லெஸ் கோபுரம்
ஈரோடு மாநகராட்சியில் பணிசெய்யும் தொழிலாளர்களை கட்டுப்படுத்தவும், அவர்களுக்கு அவ்வப்போது பணிகள் குறித்த குறிப்புகள் வழங்கவும் அதிகாரிகள் முதல் சுகாதார ஆய்வாளர்கள் வரையான பணியாளர்களுக்கு ஒயர்லெஸ் வாக்கி டாக்கி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ஒயர்லெஸ்களுக்கு இணைப்பு வழங்குவதற்காக உயர் கோபுரம் மாநகராட்சி பழைய கட்டிடத்தின் மாடியில் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று சுழன்று அடித்த சுழற்காற்றில் சிக்கிய இந்த உயர் கோபுரம் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சாய்ந்தது. அது அங்குள்ள குடிதண்ணீர் தொட்டி மீது சாய்ந்து நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
உறுதிதன்மை
கோபுரம் சாய்ந்ததால், ஒயர்லெஸ் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. வேறு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள இடங்கள், கட்டிடங்கள் மீது தொலைத்தொடர்பு உள்ளிட்ட தேவைகளுக்கான கோபுரங்கள் அமைக்கும்போது உறுதித்தன்மைக்கான அனுமதியை மாநகராட்சி அதிகாரிகள் வழங்க வேண்டும். ஆனால், மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் அமைக்கப்பட்ட உயர் கோபுரம் உறுதித்தன்மையை இழந்து சாய்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story