ஈரோட்டில் புழுதி பறக்கும் சூறாவளிக்காற்றுடன் மழை
ஈரோட்டில் நேற்று மாலை புழுதி பறக்கும் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.
ஈரோட்டில் நேற்று மாலை புழுதி பறக்கும் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.
வெயிலின் தாக்கம்
கோடை காலத்தின் வெப்பக்காற்று அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைக்கிறது. ஈரோட்டில் பிப்ரவரி மாதத்தில் இருந்தே கோடையின் தாக்கம் தொடங்கி விட்டது. மார்ச் மாதம் முழுமையாக கோடைபோன்று தினசரி 100 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெயில் வாட்டியது. ஏப்ரல் மாதம் தொடங்கியபோது சில நாட்கள் பெய்த சாரல் மழையும், ஒரு சில நாட்கள் வலுத்து பெய்த மழையும், கோடையின் தாக்கத்தை தணித்தது போன்று இருந்தது. ஆனால், மழை பெய்த மறுநாளே எந்த ஒரு பாதிப்பும் இன்றி வெயில் உக்கிரம் காட்டி வந்தது. சராசரியாக 100 டிகிரிக்கும் அதிகமாகவே வெயில் சுட்டெரித்தது. நேற்று காலை 8 மணிக்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. மதியம் நடந்து செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் இருந்தது. அனல் காற்று வீசியது.
சுழற் காற்று
இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் ஈரோட்டில் சுழற்காற்று வீசியது. ஈரோடு பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான சுழற்காற்று வீசியது. புழுதிப்புயல் போன்று அனைத்து இடங்களிலும் புழுதி பறந்தது. வீடுகள், அலுவலகங்களில் இருந்த பொருட்கள் கூட காற்றில் தூக்கி வீசப்படும் அளவுக்கு காற்றின் தீவிரம் இருந்தது.
தொடர்ந்து வானம் இருண்டது. கருமேகங்கள் திரண்டு, தூறலாக மழை தொடங்கியது. பின்னர் சிறிது நேரம் சாரல் மழையும், காற்றுமாக இருந்தது. ஈரோடு சோலாரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
Related Tags :
Next Story