நாய்கள் கடித்ததில் புள்ளிமான்கள் சாவு


நாய்கள் கடித்ததில் புள்ளிமான்கள் சாவு
x
தினத்தந்தி 30 April 2022 4:45 AM IST (Updated: 30 April 2022 4:45 AM IST)
t-max-icont-min-icon

நாய்கள் கடித்ததில் புள்ளிமான்கள் செத்தன.

தா.பேட்டை:
தா.பேட்டையை அடுத்த பேரூர் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் ஒரு புள்ளிமான் வந்தது. இந்த மானை கண்டதும் அங்கிருந்த நாய்கள் துரத்தி கடித்தன. காயமடைந்த புள்ளிமானை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மான் செத்தது. இதேபோல் நேற்று வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி பேரூர் கிராமத்திற்குள் வந்த புள்ளிமானை நாய்கள் விரட்டி சென்று கடித்தது. இதில் காயமடைந்த மானை அப்பகுதியினர் மீட்டனர். இருப்பினும் அந்த புள்ளிமானும் பரிதாபமாக செத்தது.

Next Story