தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முசிறி:
முசிறி கைகாட்டியில் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சம்பத் கண்டனம் தெரிவித்து பேசினார். கார்ப்பரேட்டுக்கு ஆதரவான சாலை பாதுகாப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை, இன்சூரன்ஸ் கட்டணம், சுங்க கட்டணம் போன்றவற்றின் உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் திருச்சி புறநகர் ஆட்டோ சங்க தலைவர் அழகேசன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story