குன்றத்தூரில் 8-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை : தேர்வில் மதிப்பெண் குறைந்ததை தாய் கண்டித்ததால் விபரீதம்
குன்றத்தூரில் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுபாசினி. இவர்களது மகள் தனிஷா (13). சோமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தனிஷா குளியல் அறைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அலறல் சத்தத்தை கேட்டு தாய் ஓடி சென்று தீயை அணைத்தார்.
இதையடுத்து பலத்த காயமடைந்த தனிஷாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை தாய் கண்டித்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா? என்ற கோணத்திலும் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story