குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டெருமை
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் காட்டெருமை உலா வந்தது.
குன்னூர்
குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பிளாக் பிரிட்ஜ் பகுதியிலுள்ள வனப்பகுதியில் காட்டெருமைகள் அதிக அளவு வசித்து வருகின்றன. இவைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகிலுள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றி திரிகின்றன.மேலும் இவைகள் ஜெயந்தி நகர், நல்லப்பன் தெரு, அன்னை நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகின்றன. இந்த நிலையில் காட்டெருமை அவாஹில் ராணுவ முகாம் பகுதியிலிருந்து தேயிலை தோட்டம் வழியாக நல்லப்பன் தெரு சாலையில் உலா வந்தது. காலை நேரம் என்பதால் பொதுமக்கள் தங்கள் பணிக்கு சென்று கொண்டு இருந்தனர். காட்டெருமை சாலையில் வந்ததால் பொதுமக்கள் அச்சம் டைந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். சிறிது நேரம் சாலையில் உலா வந்த காட்டெருமை தேயிலை தோட்டம் வழியாக பிளாக் பிரிட்ஜ் பகுதிக்கு சென்றது. காலை நேரத்தில் காட்டெருமை சாலையில் உலா வந்ததால் பொதுமக்களின் பணி பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story