16 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோவில் தொழிலாளி கைது


16 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோவில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 30 April 2022 7:14 PM IST (Updated: 30 April 2022 7:14 PM IST)
t-max-icont-min-icon

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.


பந்தலூர்

பந்தலூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது, இதனால் அந்த சிறுமியை அந்தப்பகுதுியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அங்கு சிறுமியை பரிசோதனை செய்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுபற்றி அவரிடம் கேட்டனர். அப்போது பந்தலூர் பகுதியை சேர்ந்த தொழிலாளியான சுதாகர் (52) என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக தெரிவித்தார். இதனால் அவர்கள் இதுபற்றி பந்தலூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுதாகரை கைது செய்தனர். 

Next Story