கோத்தகிரியில் நந்தி வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா


கோத்தகிரியில் நந்தி வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா
x
தினத்தந்தி 30 April 2022 7:15 PM IST (Updated: 30 April 2022 7:15 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் நந்தி வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா


கோத்தகிரி

கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு சமுதாய மக்களின் உபயத்திள் 22 நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் 19-வது நாளையொட்டி காலை 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட நந்தி வாகனத்தில் எழுந்தருளி, மேள, தாளங்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திரு வீதி உலாவாக அழைத்துச் செல்லப்பட்டார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Next Story