பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
தென்திருப்பேரை வட்டார பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடந்தது.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை வட்டார பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இடைநின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்ப்பதற்கான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் மற்றும் புள்ளியியல் அலுவலர் சுடலைமணி ஆகியோர் தலைமை தாங்கினர். உதவி திட்ட அலுவலர் பெர்சியாள் ஞானமணி முன்னிலை வகித்தார். முகாமில் 2 குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இருவரையும் மீட்டு பள்ளியில் சேர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் தென்திருப்பேரை வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து செங்கல் சூளைகளிலும் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story