பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 30 April 2022 8:08 PM IST (Updated: 30 April 2022 8:08 PM IST)
t-max-icont-min-icon

சித்திரை மாத அமாவாசைையயொட்டி பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

பழனி:
உலக புகழ்பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக வாரவிடுமுறை, முகூர்த்த நாள், பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட நாட்களில் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அதன்படி, சித்திரை மாத அமாவாசையையொட்டி பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நேற்று குவிந்தனர். இதனால் தரிசன வழிகளை தாண்டியும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று பழனியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மலைக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். மேலும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் கிரிவீதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் பழனி மாரியம்மன் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், கோதைமங்கலத்தில் உள்ள மானூர் சுவாமி ஆலயம், கணக்கன்பட்டி சற்குரு ஆலயம் உள்ளிட்ட கோவில்களிலும் அமாவாசையையொட்டி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

Next Story