அழுகிய நிலையில் தூக்கில் ஆண் பிணம்


அழுகிய நிலையில் தூக்கில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 30 April 2022 2:41 PM GMT (Updated: 2022-05-01T15:12:00+05:30)

ஆறுமுகநேரி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் தூக்கில் தொங்கியது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி -ஆத்தூர் சாலை அருகே உள்ள தலைவன்வடலி விலக்கு எதிரே ஆதிதிராவிடர் சமுதாயத்துக்கு உட்பட்ட சுடுகாட்டு பகுதியில் உள்ள ஒரு வேப்பமரத்தில் தூக்கில் ஆண் பிணம் தொங்குவதாக காயல்பட்டினம் வடபாகம் கிராம நிர்வாக அதிகாரி தேசிகனுக்கு தகவல் கிடைத்தது. அவர் இதுபற்றி, ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.

அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். 

அங்கு அழுகிய நிலையில் ஆண் பிணம் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. அவருக்கு சுமார் 50 வயது இருக்கும், அவர் இறந்து 5 நாட்கள் ஆகியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அந்த இடத்தின் அருகில் மஞ்சள் நிற பையில் மெருன் நிறத்தில் பேண்ட்டும், பச்சை நிறத்தில் சட்டையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிணத்தை போலீசார் கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story