அரிவாளால் வெட்டி ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு; பணம் வராததால் வாலிபர் ஆத்திரம்
வத்தலக்குண்டுவில், பணம் வராததால் ஆத்திரம் அடைந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டுவில், பணம் வராததால் ஆத்திரம் அடைந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு வடக்கு தெருவில், மாரியம்மன் கோவில் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் அங்கு சென்றார்.
தான் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் சொருகி பணம் எடுக்க முயன்றார். ஆனால் பணம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து நொறுக்க முடிவு செய்தார்.
அதன்படி வீட்டுக்கு சென்ற அவர், சிறிதுநேரம் கழித்து அரிவாளுடன் மீண்டும் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார்.
இதற்கிடையே ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கைது-அரிவாள் பறிமுதல்
அதன்பேரில் வத்தலக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த சுதன் (வயது 22) என்று தெரியவந்தது.
இவர், அப்பகுதியில் உள்ள பலசரக்கு கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வராத ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி உடைத்ததாக தெரிவித்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதனை கைது செய்தனர். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story