வியாபாரியின் ஸ்கூட்டர் எரிப்பு


வியாபாரியின் ஸ்கூட்டர் எரிப்பு
x
தினத்தந்தி 30 April 2022 8:41 PM IST (Updated: 30 April 2022 8:41 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே வியாபாரியின் ஸ்கூட்டர் தீவைத்து எரிக்கப்பட்டது.

பெரும்பாறை:
பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 67). காபி, மிளகு வியாபாரி.
இவர், மூலக்கடையில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது ஸ்கூட்டரை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார்.
பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது, ஸ்கூட்டர் எரிந்து எலும்புக்கூடாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் மண்எண்ணெய் ஊற்றி ஸ்கூட்டரை எரித்திருப்பது தெரியவந்தது.

Next Story