தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை அமைக்கப்படுமா?
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி இந்திராகாலனியில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மண்பாதையாகவே உள்ளது. மேலும் அப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படாததால் கழிவுநீர் பாதையில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அருள், சருத்துப்பட்டி.
பள்ளத்தால் விபத்து அபாயம்
திண்டுக்கல் நந்தவனம்பட்டி அருகே, தலைமை மண்டல போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு செல்லும் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென பள்ளம் ஏற்பட்டது. இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில், திண்டுக்கல்.
இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்
பழனி இடும்பன்குளம் பகுதியில் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இறைச்சி கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிக்குமார், பழனி.
வேகத்தடை வேண்டும்
பழனி ரெட் கிராஸ் ரோடு சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீதரன், பழனி.

Related Tags :
Next Story